கல்வியங்காடு பகுதியில் மூன்று வீடுகளுக்கு புகுந்து வாள்வெட்டு – பெண் உள்பட மூவர் காயம்!!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 3 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் தந்தை, தனயன் மற்றும் குடும்பப் பெண் என மூவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அடுத்தடுத்து மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மூவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீடுகளிலுள்ள பொருள்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.

ஒரு வீட்டில் குடும்பப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு வீட்டில் தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரும் இரகசிய பொலிஸ் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts