Ad Widget

கல்விமான்களினது பொறுப்பு நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைதலாகும்

இன்று கல்விமான்களினதும் புத்திஜீவிகளினதும் பொறுப்பு, சம்பளம் மற்றும் சிறப்புரிமைகள் போதாது எனக்கூறி நாட்டை விட்டு வெளியேறுதலன்றி எதிர்கால சந்ததியினருக்காக அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதற்காக நாட்டை பொறுப்பேற்றலாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

event-04032016

நேற்று (04) முற்பகல் கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள பௌத்த நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அரச சேவை பொறியியல் சங்கத்தின் 39 ஆவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவொரு துறையிலும் பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும் தனிப்பட்ட நன்மைகளைப் போன்றே நாட்டின் தேவைகளையும் இனங்காணுதல் அனைவரதும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டார்.

இலவசக் கல்வியைப் பெற்று சுதந்திரமாக நாட்டை விட்டு வெளியெறுவதற்கான சந்தர்ப்பம் இலங்கையின் கல்விமான்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் உள்ள போதும் உலகில் அபிவிருத்திப் பாதையில் பயணித்த எந்தவொரு நாட்டிலும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் காணப்படவில்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எமது நாடு தற்போதுள்ள இடத்தினைப் பற்றி பின்னடையாது மன உறுதியுடனும் விசுவாசத்துடனும் நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு ஆகக்கூடிய பங்களிப்பை வழங்குதல் அனைவரதும் பொறுப்பாகுமென தெரிவித்தார்.

பொறியியல், மருத்துவம் போன்றே நாட்டின் சகல துறைகளிலும் உருவாகியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்வதற்கு தற்போதைய அரசு பாடுபடுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அரசு என்ற ரீதியில் மேற்கொள்ளப்படும் கடமைப் பொறுப்புக்களின் போது ஆரோக்கியமான மனிதர்களை உருவாக்குவதைப் போன்றே அவர்களுக்குத் தேவையான அறிவினை வழங்குவது அரசின் நோக்கமாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் இலவசக் கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் பலப்படுத்துவதற்கு முன்னெப்போதும் மேற்கொள்ளப்படாத பணியினை தற்போதைய அரசு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் அபிவிருத்திக்காக நீண்டகாலம் தன்னை அர்ப்பணித்து தனது அறிவு, அனுபவம் ஆகியவற்றை தேசத்தின் நன்மைக்காக பயன்படுத்துவதற்கு அரச சேவை பொறியியலாளர் சங்கம் மேற்கொள்ளும் கடமைப் பொறுப்பினை ஜனாதிபதி பாராட்டினார்.

ஜனாதிபதியின் பங்கேற்பினை நினைவுகூரும் முகமாக அரச சேவை பொறியியல் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.பி.கமகேவினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் இலங்கை பொறியியல் நிறுவனத்தின் தலைவர் திரு.விமலசேன கமகே உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Related Posts