கல்லூரி காலத்துக்கு செல்கிறார் சூர்யா!

கதாபாத்திரங்களுக்காக தன்னை முழுவதுமாக மாற்றிக்கொள்வதில் விக்ரம் முன்னோடியாக இருந்து வருகிறார். குறிப்பாக, ஐ படத்திற்காக தனது உடலை வருத்தி அவர் நடித்தது பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் நடிகர்களை வரை வியக்க வைத்தது.

sooryaa

அதேபோல் சூர்யாவும் சில படங்களில் உடலை வருத்தி நடித்திருக்கிறார். அந்த வகையில், ரசிகர்களுக்கு தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்து வரும் சூர்யா, தற்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் 20 வயது இளைஞனாக நடிக்கிறார்.

அந்த காட்சிகளில் காஸ்டியூம், ஹேர்ஸ்டைலில் மட்டுமே தன்னை இளைஞனாக காட்டி நடிக்க விரும்பாமல், உடல் எடையை குறைத்து, தனது இளமைக்காலத்துக்கு செல்கிறாராம் சூர்யா. அதற்காக, 10 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து தனது கல்லூரி காலத்துக்கு செல்கிறாராம் அவர்.

அதனால் தற்போது உடல் இளைத்து சின்ன வயது சூர்யாவாக காட்சி கொடுத்து வரும் சூர்யாவை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். அதேசமயம் இந்த கெட்டப்பில் அதிகமாக வெளியில் தலைகாட்டுவதையும் அவர் குறைத்திருக்கிறார்.

Related Posts