அம்பாறை,கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் சிறிலங்கா தௌப்பீக் ஜீம்மா மார்க்க ஒன்றுகூடல் கட்டடம் மீது இனம் தெரியாதோரினால் நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்தே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா தௌப்பீக் ஜீம்மா மார்க்கம் சம்மந்தமாக கலந்துரையாடப்படும் ஒன்றுகூடல் கட்டடம் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் தகரத்தினால் அமைக்கப்பட்டு இயங்கிவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த ஒன்றுகூடல் கட்டடத்திற்கு சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் ஒரு குழுவினர் உள்நுளைந்து. அங்கிருக்கின்ற பொருட்கள் மற்றும் கட்டடத்தின் தகரங்களை உடைத்து சேதமாக்கிய பின்பு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்தே அங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.