பாடசாலை விடுமுறையை முன்னிட்டு கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் மேலதிக பெட்டியொன்று இணைக்குமாறு ரயில் பொதுமுகாமையாளர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேலும் விடுமுறை காலத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இன்று முதல் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வரை மேலதிக ரயில் சேவைகளை நடத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து காலை 11.30க்கு பயணமாகும் விசேட ரயில் இரவு 10.40க்கு பதுளையைச் சென்றடையும். பதுளையில் இருந்து காலை 7.15க்கு பயணிக்கும் விசேட ரயில் மாலை 6.12க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.