கலைமாணித் தேர்வு வெளிவாரிப் பரீட்சைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் கலைமாணித் தேர்வு பகுதி 1 – 2013 (வெளிவாரி) பரீட்சையை, எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரீட்சைகள் தொடர்பான நேர அட்டவணைகளையும் பரீட்சை அனுமதி அட்டைகளையும் நாளை 08ஆம் திகதி தொடக்கம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளமுடியும்.

மேலதிக விவரங்களுக்கு 021 2223612 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவலினைப் பெற்றுக்கொள்ளமாறு, பதிவாளர் அறிவித்துள்ளார்.

Related Posts