கலைஞர்களே எதிர்கால இளைஞர்களுக்கு கலையை எடுத்துச் செல்லும் வழிகாட்டி

வடபுலத்திலுள்ள கலைஞர்கள் தமது கலை வடிவத்தை எதிர்கால இளைஞர்களிடத்தில் எடுத்துச் செல்லும் வழிகாட்டியாக திகழ வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார்.

kurugula-raja

இன்று காலை 10.00 மணியளவில் வடமாகாண கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற வடமாகாண கலைஞர்களுக்கான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் பாரம்பரியத்தின் உன்னதமானதொன்றாக கலை கலாசாரமே திகழ்கின்றது.அதுமட்டுமல்லாது எதிர்கால இளைஞர்கள் கலைத்துறையில் பின்னிற்காது முன்னோக்கி செல்ல வேண்டும். தமிழ் பேசும் மக்களிடத்தில் கலை வடிவம் பேணிப்பாதுகாக்கப்படவேண்டும்

தற்போது யாரையும் போற்றும் எண்ணம் உருவானால் எதற்கும் பொன்னாடை போர்த்தி அவரை வாழ்த்துகின்றோம்.இந்த பொன்னாடை போர்த்துவது தமிழ் மக்களின் கலாசாரமாகிவிட்டது. அதேபோலத்தான் கலைஞர்களாகிய உங்களிடத்தில் பாரிய பொறுப்புக்கள் உள்ளது.அதாவது எதிர்கால இளைஞர்களை கலைத்துறையில் ஈடுபடுத்தி அவர்களையும் கலைஞர்களாக மாற்றுவது உங்கள் கையில் தான் தங்கியுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.
.
மேலும் இந்நிகழ்விற்கு வடமாகாண கலை கலாசார பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் உசா சுபலிங்கம் கலந்து கொண்டிருந்தார்.

Related Posts