கலாபூஷண விருதுக்கு விண்ணப்பங்கள் கோரல்

கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷண விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எனவே இதற்கமைவாக நாட்டிலுள்ள நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்கள், தற்காப்புக் கலைஞர்கள், நடனம், தாள வாத்தியம், இசை, மஜிக், கிராமியக் கலை, கவி, திரைப்படம் மற்றும் வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் தமக்கான விண்ணப்ப படிவங்களைப் பெற்று இவ் விருது வழங்கும் நிகழ்வுகக்கு விண்ணப்பிக்கலாம்.

60 வயதிற்கு மேற்பட்ட கலைத்துறைகளில் ஈடுபாடுடையவர்கள் அனைவரும் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை யாழ்.பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts