கலாசார சீரழிவு மலிந்த ஒரு இனமாக நாம் மாறியுள்ளோம்: வடக்கு முதலமைச்சர்

கலாசார சீரழிவு மலிந்த ஒரு இனமாக நாங்கள் மாறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கும் விடயம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாவாந்துறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நூலகத் திறப்பு விழாவில் உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு நூலகம் அப் பகுதியில் உள்ள மக்களுக்கு அவர்களின் வயது, தொழில் வேறுபாடின்றி அனைவருக்கும் நன்மை பயக்க வல்லது. சிறந்து விளங்கிய ஒரு பண்பட்ட எமது சமூகம் இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் நிற்கின்றது.

சமூகப் பழக்கவழக்கங்கள் குன்றியவர்களாக போதைப் பொருள், கலாசார சீரழிவு ஆகியவை மலிந்த ஒரு இனமாக நாங்கள் மாறியிருப்பது எமக்கு மிகுந்த வேதனை அளிக்க வேண்டும்.

வளர்ச்சியடைந்த நாடுகள் மனித வலுவின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக நவீனரக மின்னியல் சாதனங்களைக் கண்டுபிடித்தனர். எம்மைப் போன்ற வளர்முக நாடுகளில் வசிக்கின்ற மக்களோ தங்கள் முழுநேரத்தையும் மழுங்கடிக்கச் செய்துள்ளார்கள். இந்தச் சாதனங்கள் மூலம் அவர்களைக் கல்வி-கேள்வி அறிவுகளில் இருந்து தூரத் தள்ளிவிட்டுள்ளன” என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Posts