போர்க்குற்ற விசாரணைகளை மேற் கொள்வதற்கு கலப்பு நீதிமன்றம் நியமிப்பதினால் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினால் இலங்கை தொடர்பாக இன்று வௌியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினாலோ அல்லது கலப்பு விசாரணை முறையினாலோ தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.