கலப்பு நீதிமன்றம் செயற்படுத்தப்படாது!

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து கலப்பு நீதிமன்றம் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என மீண்டும் நினைவூட்டுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நீதிமன்ற அமைப்பில் இணைக்கப்பட்ட தேசியப் பொறிமுறை மூலமே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related Posts