கலக்க போவது யாரு-6′ : 21ம் தேதி முதல் ஒளிபரப்பு

விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. மிமிக்ரி மற்றும் மற்றும் காமெடி திறமைகளை வெளியே கொண்டு வரும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் திறமைகளை காட்டிய சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ஈரோடு மகேஷ், உள்ளிட்ட பலர் திரைப்பட நடிகர்களாகிவிட்டார்கள்.

kalakkapovathu

கலக்கப்போவது யாரின் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. இதன் 6வது சீசனுக்கான பணிகள் நடந்து வந்தது. தற்போது அது முடிந்திருக்கிறது. வருகிற 21ந் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கியவர்கள் பலர் திரைப்பட நட்சத்திரங்களாகிவிட்டதால் இந்த 6வது சீசனுக்கு வெள்ளித் திரைக்கான அடுத்த பயணம் ஆரம்பம் என்பதையே ஸ்லோகனாக வைத்திருக்கிறார்கள்.

6வது சீசனில் பல புதுமையான அம்சங்களும் இடம்பெற இருக்கிறது. பல திறமையான புதியவர்கள் வர இருக்கிறார்கள். அவர்களுடன் பழைய திறமையாளர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த முறை பிரமாண்ட அரங்கம் நிர்மாணம் செய்து அதில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் இன்னொரு சிவகார்த்திகேயனோ, ரோபோ சங்கரோ கிடைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Posts