கலகலப்பு பாணிக்கு மாறும் சுந்தர்.சி!

அரண்மனை-2 படத்தை இயக்கிய பிறகு, முத்தின கத்திரிக்காய் என்ற படத்தில் நாயகனாக நடித்தார் சுந்தர்.சி. அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், அடுத்தபடியாக சங்கமித்ரா என்றொரு சரித்திர படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக அவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. தேனாண்டாள் பிலிம்சின் 100வது படமான அந்த படத்தில் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தால்தான் வியாபாரரீதியாக படம் வெற்றி பெறும் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தினார் சுந்தர்.சி.,

ஆனால், இரண்டறை வருடம் அந்த படத்திற்காக ஒதுக்க வேண்டும் என்றதால் விஜய் உடன்படவில்லை. அதனால் பின்னர் அவர் ஜெயம்ரவியிடம் பேசி வருவதாக கூறப்பட்டது. அதேசமயம், மெகா பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் ஜெயம்ரவி போன்ற நடிகர்கள் நடித்தால் படத்தை வியாபாரம் செய்ய முடியாது என்றொரு கருத்தும் நிலவியதால், பின்வாங்கினார் சுந்தர்.சி. தற்போது சங்கமித்ரா படம் குறித்த தகவல்களே இல்லை.

இந்த நிலையில், கலகலப்பு படம் போன்று ஒரு ஜாலியான காமெடி படத்தை இயக்க சுந்தர்.சி முடிவெடுத்திருப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.

இந்த படத்தில் ஒரு காமெடி பட்டாளமே நடிக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

Related Posts