மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகத்தினால், நவாலி அட்டகிரி சைவ வித்தியாசாலை மாணவர்களிற்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் நேற்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டன.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் த.ஈஸ்வரராஜா, வலி.தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன், சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி நவசக்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, 60 மாணவர்களுக்கு மேற்படி உபகரணங்களை கையளித்தனர்.