ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார்.
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஏழு மாத கர்ப்பிணியான ஞானசேகரன் ஹம்சிகா என்ற கர்ப்பிணித் தாய் படுகொலை செய்யப்பட்டார். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவர் ஊர்காவற்துறை காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.