கர்நாடக சங்கீதம் மற்றும் நடனம் கற்க ஆர்வமுள்ள மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இந்தியத் துணைத் தூதரகத்தில் குறித்த பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இந்தியத் துணைத் தூதரகம் ஹிந்தி மொழி மற்றும் யோகாப் பயிற்சிகளை நடாத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.