கருணாவுக்கு பிணை கிடைத்தது!

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரச வாகனத்தை துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, கடந்த 29ம் திகதி நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட கருணா, பின்னர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மேலும், கடந்த ஐந்தாம் திகதி அவரது பிணை கோரிக்கை பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிணை வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts