கருணாநிதிக்கு சம்பந்தன் எழுதிய கடிதம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தி.மு.க தலைவர் கருணாநிதி 13-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றீர்கள். உங்களுக்கு இலங்கை வாழ் தமிழ் மக்கள் சாபில் என வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்,

இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்’’ என்றும் சம்பந்தன் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக தமிழக ஊடகமான நக்கீரன் செய்தி வௌியிட்டுள்ளது.

14718650361

Related Posts