கருடா படம் டிராப்! அடுத்து சாமி-2வில் நடிக்கிறார் விக்ரம்!!

விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் திரு. அதையடுத்து அவர் விக்ரம் நடிப்பில் கருடா என்றொரு படத்தை இயக்கியிருந்தார்.

vikram

தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இருமுகன் படத்தில் நடித்துள்ள விக்ரம், அடுத்தபடியாக கருடாவில்தான் நடிப்ப தாக இருந்தது. ஆனால் தற்போது டைரக்டர் திரு தனது டுவிட்டரில், கருடா படம் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், விக்ரமிடத்தில் கருடா கதையை சொல்லி விட்டு, பல மாதங்களாக அவருக்காக காத்திருந்தார் டைரக்டர் திரு. இருமுகன் படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரமும் அவர் இயக்கத்தில் நடிப்பதாகதான் கூறி வந்தார்.

ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த படம் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற 8-ந்தேதி விக்ரம் நடித்துள்ள இருமுகன் படம் திரைக்கு வருகிறது. அதையடுத்து அவர் நடிக்கயிருந்த கருடா நிறுத்தப்பட்டிருப்பதால், அடுத்து ஹரி இயககும் சாமி-2வில் விக்ரம் நடிப்பார் என்று தெரிகிறது.

Related Posts