கராத்தே போட்டியில் தாயும் மகனும் முதலிடம்

பருத்தித்துறை தற்காப்புக் கலையகத்தினால் (Institute of Martial Arts, Point Pedro), சிகான் பொனி றோபேட் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட கராத்தேப் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாயும் மகனும் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளனர்.

mother-son-murali-karaththey

இப்போட்டிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் பங்கு பற்றிய திருமதி முரளி மாலதி காட்டா போட்டியில் முதலிடத்தையும், 7 வயதுப் பிரிவில் பங்கு பற்றிய திருமதி முரளி மாலதியின் மகனான முரளி பரிதியனும் முதலிடத்தைப் பெற்றனர்.

குறித்த போட்டிகள் நேற்று முன்தினம் 4 ஆம் திகதி தும்பளையில் அமைந்துள்ள தற்காப்புக் கலையக மண்டபத்தில் இடம்பெற்றது.

Related Posts