கராச்சி விமான நிலையத்தின் மீது ஒரு வாரத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட இரவுத் தாக்குதலின் உஷ்பெக்கைச் சேர்ந்த சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படுபவரை தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே ஞாயிறு அதிகாலை நடத்தப்பட்ட வான் தாக்குதலில் கொல்லப்பட்ட 50க்கும் அதிகமான வெளிநாட்டு மற்றும் பாகிஸ்தான் பிரஜைகளில் அபு அப்துல் ரஃமான் அல் மானியும் ஒருவர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தலிபான்கள் மற்றும் அல்கைதாவுடன் தொடர்புடைய அல்கைதாவினர் ஆகியோரின் பலம் மிக்க இடமாக திகழும் வடக்கு வசிரிஸ்தானின் பழங்குடியின மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
கிட்டத்தட்ட 40 பேர் கொல்லப்பட்ட கராச்சி விமானநிலையத்தின் மீதான தாக்குதலை தாமே மேற்கொண்டதாக பாகிஸ்தானிய தலிபான்களும், உஷ்பெக் போராளிகளும் கூறியிருந்தனர்.