கரவெட்டியில் மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை!!

மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு, தந்தை தனது உயிரை மாய்த்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.

கரவெட்டி தேவரையாளி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.

சம்பவத்தில் பாக்கியராஜா (வயது – 63) என்பவரே தனது உயிரை மாய்த்தார். தந்தையில் கத்தி வெட்டுக்கு இலக்காகிய அவரது மகன் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தந்தை மகனை கத்தியால் இரண்டு தடவைகள் வெட்டியுள்ளார்.

சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது. அதனையடுத்து மகனை மந்திகை வைத்தியசாலையில் உறவினர்கள் சேர்த்தனர்.

இந்த நிலையில் தந்தையின் செயல் குறித்து நெல்லியடிப. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இரவு 10 மணியளவில் தந்தை தனது வீட்டுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் சகோதரிகள் இருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts