கம்பஹா, கொழும்பில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.

முறையே கம்பஹாவில் 18 பேரும் கொழும்பில் 17 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குருநாகல் -04, களுத்துறை-04, இரத்தினபுரி -03, காலி -01, கேகாலை -01, மாத்தறை -01, மட்டக்களப்பு -01, பதுளை -01 என கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இலங்கையில் வெளிநாட்டவா்கள் 03 பேரும் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

வயது ரீதியாக இலங்கையில் பாதிக்கப்பட்டவா்களில் 11 முதல் 20 வயதானோர் 5.6. வீதம், 21 முதல் 30 வயதானோர் -11.1 வீதம், 31 முதல் 40 வயதானோர் – 14.8 வீதம், 41 மதல் 50 வயதானோர் – 42.6 வீதம், 51 முதல் 60 வயதானோர் -16.7 வீதம், 61 முதல் 70 வயதினா் 7.4 வீதம், 71 முதல் 80 வயதினா் -7.4 வீதமாக உள்ளனா்.

பாலின ரீதியான 78 வீதம் ஆண்களும் 22 வீதம் பெண்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா்.

இலங்கையில் இதுவரை 65 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கொட தொற்றுநோய் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts