கமல் வீட்டில் தீ விபத்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கமல்!!

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில், நள்ளிரவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்த கமல், புகைமூட்டத்திற்கு நடுவே படி வழியாக இறங்கி வெளியேறினார்.


இவ்விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: என் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. நான் பத்திரமாக இருக்கிறேன், யாருக்கும் பாதிப்பு இல்லை. தீ விபத்தில் இருந்து தப்பிக்க உதவிய எனது ஊழியர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மூன்றாவது மாடியில் உள்ள அறையில் இருந்த குளிர்சாதனபெட்டி அதிக வெப்பமடைந்ததால் தீ விபத்து நிகழ்ந்ததாகவும், இதனால் அதன் அருகில் இருந்த புத்தகங்களில் தீ பற்றி வீடு முழுவதும் புகை சூழ்ந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts