கமல் நலமாக உள்ளார்: சந்திரஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நலமாக உள்ளதாக அவரது அண்ணன் சந்திரஹாசன் தெரிவித்தார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமலை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் சந்திரஹாசன் கூறியது:-

கமலுக்கு காலில் ஏற்பட்ட எலும்புமுறிவைச் சரி செய்ய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதம் கழித்து கமல் இயல்பாக நடக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். காலுக்கு அதிக பாரம் தரக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், கைப் பிடியை கமல் பயன்படுத்த வாய்ப்புள்ளது. கமல் உற்சாகமாக உள்ளார். ரசிகர்கள் பயப்படத் தேவையில்லை என்றார்.

Related Posts