கமல் கூப்பிட்டும் நடிக்க மறுத்தாரா ஸ்ருதிஹாசன்?

ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருக்கு வந்த ஒரு ஜாக்பாட் வாய்ப்பை மறுத்து விட்டதாக ஒரு வதந்தி பரவியது.

kamal_shruthi001

அது என்னவென்றால் விஸ்வரூபம்-2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஸ்ருதிக்கு அழைப்பு வந்ததாகவும், அதை அவர் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டதாக கூறப்பட்டது.

சமீபத்தில் இதற்கு விளக்கம் அளித்த அவர் ‘அப்பாவின் படத்தில் ஒரு காட்சியில் நடிக்கவே ஆர்வமாக இருக்கிறேன், அப்படியிருக்க நான் ஏன் அதை மறுக்க போகிறேன், எனக்கு எந்த ஒரு அழைப்பும் வரவில்லை, அப்படி வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Posts