‘கமல்ஹாசன் நன்றி இல்லாதவர்’ – சரத்குமார்

கமல் ஹாஸனின் பல பிரச்சினைகளை நான்தான் முன் நின்று தீர்த்து வைத்திருக்கிறேன். அவர் நன்றி இல்லாதவர் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு, என்றார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.

kamal-sarath-2-600

நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை மூத்த நடிகரான கமல் ஹாஸன் எடுத்திருப்பது குறித்து சரத்குமார் கூறுகையில்,

“விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’ ஆகிய 2 படங்களின் பிரச்சினைகளின் போதும், நான் தொடர்ந்து 36 மணி நேரம் தூங்காமல் விழித்திருந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர உதவினேன். அப்போது கமல்ஹாசனை நான் நேரில் கூட பார்க்கவில்லை. அலைப்பேசியில்தான் அவருடன் பேசினேன்.

ஸ்ருதிஹாசனுக்கு ஆந்திராவில் ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது, அவர் மீதான புகாரை வாபஸ் வாங்குவதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வைத்தேன்.

அதற்கு ஒரு நன்றி கூட அவர் சொல்லவில்லையே. இப்படி நன்றி இல்லாமல் போய்விட்டாரே என்ற ஆதங்கம்தான் எனக்கு. ஆனால் கமல்ஹாசன் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோபமும் இல்லை. எதற்காக நான் கோபப்பட வேண்டும். அது அவர் விருப்பம்,” என்றார்.

Related Posts