கமல்ஹாசன் இன்று காலை வீடு திரும்பினார்

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார். கால் எலும்பு முறிவு காரணமாக கடந்த 3 வாரமாக அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் குணமடைந்துசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்து முடித்த சபாஷ் நாயுடு முதல் கட்ட படப் பிடிப்புக்கு பிறகு, சென்னை திருப்பினார் கமல். தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளை அவரது ஆழ்வார் பேட்டை அலுவலகத்தில் தன் குழுவினரோடு மேற்கொண்டு வந்தார்.

கடந்த ஜூலை 13ஆம் தேதி தன் அலுவலக மாடிப்படிகட்டில் இறங்கி வரும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார் கமல் . இதனை அடுத்து சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த கமல் இரண்டு நாட்களுக்கு முன் எழுந்து மெதுவாக நடக்க தொடங்கினார். இதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டார் கமல்ஹாசன். இந்நிலையில் 22 நாட்களுக்குப் பின்னர் இன்று காலையில் மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யபட்டார்.

காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள கமல் மூன்று அல்லது நான்கு வார ஓய்வுக்கு பிறகு தனது வழக்கமான பணிகளை செய்யத் தொடங்குவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .

கமல் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்த அவரது ரசிகர்கள் தற்போது உற்சாகம் அடைத்துள்ளனர்.

Related Posts