கமல்ஹாசனின் அடுத்த படம் பற்றிய குழப்பம்

‘தூங்காவனம்’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் அடுத்து நடிக்க உள்ள படம் பற்றிய குழப்பம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, அவரும், அமலாவும் தமிழ், தெலுங்கில் நடிப்பதாகத் தகவல் வெளியான ‘அம்மா ஆப்பா ஆட்டம்’ படம் தற்போதைக்குத் தயாராகாது என்றும் தகவல் வெளியானது.

கமல்ஹாசனும் ஸ்ருதிஹாசனும் முதல் முறையாக இணைந்து நடிக்கப் போகும் படத்தைப் பற்றி மட்டும் உறுதியான தகவல் வெளிவந்தது. ஆனால், இன்னும் அந்தப் படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து பல்வேறு விதமானத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கமல்ஹாசனை வைத்து பல வருடங்களுக்கு முன்பு ‘சாணக்யன்’ படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ் குமார் அந்தப் படத்தை இயக்கப் போவதாகச் சிலர் சொல்கிறார்கள்.

இன்னும் சிலரோ ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கப் போகிறார் என்கிறார்கள். இதனிடையே கமல்ஹாசனை வைத்து ‘பம்மல் கே.சம்பந்தம்’ படத்தை இயக்கிய மௌலி கமல்ஹாசனின் மற்றுமொரு புதிய படத்தை இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால், அது ஒரு பழைய தகவல், தற்போது மீண்டும் ஏன் வலம் வந்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை என மௌலி சொல்லியிருக்கிறார்.

கமல்ஹாசனின் அடுத்த படம் எது என்பதை அவரே அறிவித்தால்தான் உண்மை எது என்பது தெரிய வரும்.

Related Posts