கமலை மதிக்காத சந்தானம்!

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான்.

kamal_santhanam006

ஆனால் இவர் கதாநாயகன் ஆனதால் இனி முன்னணி நடிகர்கள் படத்தில் மட்டும் காமெடியனாக நடிக்கலாம் என்று யோசித்து வருகிறார்.

இந்நிலையில் சந்தானம், சேது, விசாகாசிங் நடித்த வாலிபராஜா படத்தின் இசைவெளியீட்டு சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.

அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசைத்தட்டை வெளியிட்டவர் கமல்ஹாசன்.உத்தமவில்லன் பட வேலைகளில் பிஸியாக இருந்த கமல் அத்தனை பிஸியிலும் வாலிபராஜா இசைவெளியீட்டு விழாவுக்கு வர சம்மதித்ததே சந்தானத்துக்காகத்தானாம்.

அவர் கமலை சந்தித்து விழாவுக்கு வர அழைத்ததின் பேரிலேயே வருவதற்கு சம்மதித்தாராம் கமல்.ஆனால் கடைசி நேரத்தில் லிங்கா படத்தில் நான் பிஸியாக இருக்கிறேன் என்று சொல்லி வரவில்லையாம், இதற்காக கமல் தயாரிப்பாளரிடம் மிகவும் வருத்தப்பட்டுள்ளார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. –

Related Posts