கமலைத் தொடர்ந்து அர்ஜூனும் மகளுடன் நடிக்கிறார் !

கமலின் மகளான ஸ்ருதிஹாசன், லக் இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து தெலுங்கில் நடித்தவர் ஏ.ஆர்.முருகதாஸின் ஏழாம் அறிவு படத்தில் தமிழுக்கு வந்தார். பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார்.

arjun-doughter

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பே கமல் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க அவரிடம் கால்சீட் கேட்கப்பட்டது. அப்போது இந்தியில் தான் பிசியாக இருப்பதாக சொன்னார் ஸ்ருதி. அதோடு, என் அப்பாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் உள்ளது. நானும் அதற்கான தருணத்தை எதிர்பார்த்திருக்கிறேன் என்று சொன்ன ஸ்ருதிஹாசன், இப்போது கமல் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்தநிலையில், அர்ஜூனும் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இணைந்து நடிக்கப்போகிறாராம். விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் நடித்த ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு அதன்பிறகு படவாய்ப்பு இல்லை. அதனால் ஒரு மெல்லியக்கோடு, நிபுணன் படங்களில் நடித்த அர்ஜூன், அதன்பிறகு இப்போது இயக்க உள்ள ஒரு படத்தில் மகள் ஐஸ்வர்யாவை முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்க வைப்பவர், கமர்சியல் கருதி தானும் ஒரு வேடத்தில் நடிக்கிறாராம். விரைவில், அதன் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

Related Posts