கமலுடன் ரம்யா கிருஷ்ணன்

கமல் நடிப்பில் வெளிவந்த ‘தசவதாரம்’ படத்தில் இடம் பெற்ற பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தை வைத்து ‘சபாஷ் நாயுடு’ என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமல் நடிக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

kamal-ramya

இப்படத்தின் மூலம் ஸ்ருதிஹாசன் முதன்முறையாக தனது அப்பா கமலுடன் இணைந்து நடிக்கிறார். கமலின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இப்படக்குழுவினருடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. ‘சபாஷ் நாயுடு’ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது.

இதற்கு முன் கமலுடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் படம் மெகா ஹிட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts