கமலுடன் ஜோடி சேரும் தமன்னா?

கமலின் ‘தூங்காவனம்’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் கமலுடன் திரிஷா நடித்து இருக்கிறார். ராஜேஷ் செல்வா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tamanna-1024x680

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே கமல் அடுத்த படத்துக்கான ஏற்பாடுகளை தொடங்கி விட்டார். இளம் தாடியுடன் இருந்த கமல் முறுக்கு மீசையுடன் வலம் வருகிறார்.

புதிய படத்துக்காக கமல் ‘கெட்அப்’பை மாற்றி விட்டார் என்று கூறப்பட்டது. அடுத்த படத்தை பிரபல மலையாள டைரக்டர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இப்போது மவுலியின் திரைக்கதையில் உருவாகும் புதிய படத்தில் கமல் நடிப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கமல் ஜோடியாக முன்னணி நடிகைகளில் யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் தமன்னா தேர்வு செய்யப்பட்டதாகவும், இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘பாகுபலி–2’ படத்தில் நடிக்க இருக்கும் தமன்னா, தமிழில் தோழா, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கமலுடன் நடிக்க பல முன்னணி நடிகைகள் காத்து இருக்கும் நிலையில் தமன்னாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கமலின் இந்த புதிய படத்தையும் ‘தூங்காவனம்’ பட இயக்குனர் ராஜேஷ் செல்வாவே இயக்குவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Related Posts