கமலுக்காக ‘கபாலி’ சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யும் ரஜினி?

ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கபாலி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. எனினும் ரஜினி ஹீரோயிசம் காட்டாமல் இப்படத்தில் நடித்திருக்கிறார் என்ற பாராட்டுகளுக்கும் குறைவில்லை.

Rajini-Kamal

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் ‘கபாலி’க்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், தனது நெருக்கமான நண்பர்களின் விமர்சனத்தை ரஜினி மிகவும் எதிர்பார்க்கிறாராம். இதனால் நேற்று தனது நண்பரும், அரசியல் விமர்சகருமான சோ.ராமசாமிக்கு ‘கபாலி’ படத்தை திரையிட்டு காண்பித்த ரஜினி, அடுத்ததாக தனது மற்றொரு நண்பரான கமலுக்கு ‘கபாலி’ படத்தின் சிறப்புக்காட்சியை திரையிட்டு காண்பிக்க ஏற்பாடுகள் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கமல் தற்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இன்னமும் ‘கபாலி’ படத்தை பார்க்கவில்லை. அதனால், இன்னும் சில தினங்களில் காயம் குணமாகி வீடு திரும்பியதும் ‘கபாலி’ படத்தின் சிறப்புக் காட்சியை ரஜினி அவருக்கு திரையிட்டு காண்பிப்பார் என்று கூறப்படுகிறது.

Related Posts