கமலின் முத்த சாதனையை முறியடித்த ஜீவா

“லொள்ளு சபா’ என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ஜீவா. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் அறிமுகமாகிறார்.

ajith-fan-record-break-kamal-kissing-scene_SECVPF

அஜித்தின் தீவிர ரசிகரான இவர், அறிமுகமாகும் முதல் படத்தின் தலைப்பே அஜித் படங்களின் தலைப்பை இணைத்து வைத்துள்ளார். அஜித் நடித்த ‘ஆரம்பம்’, ‘அட்டகாசம்’ ஆகிய படங்களை இணைத்து இப்படத்திற்கு ‘ஆரம்பமே அட்டகாசம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தின் நாயகியாக கன்னடத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்த சங்கீதா பட் என்பவர் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும், பாண்டியராஜன், சாம்ஸ், வையாபுரி, ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ரங்கா என்பவர் இயக்குகிறார். இவர் இயக்கத்தில் ஏற்கெனவே ‘நாய்குட்டி’ என்ற படம் தயாராகி இன்னும் வெளிவராமல் இருக்கிறது.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படமாக தயாராகும் இப்படத்தில் கமலின் முத்த சாதனையை லொள்ளு சபா ஜீவா முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக தமிழ் ஹீரோக்களில் கமல்ஹாசன் தான் முத்த மன்னன் என்று சொல்வார்கள். கமலின் படத்தில் கண்டிப்பாக ஒரு லிப் லாக் முத்தக்காட்சி இடம்பெறும். ஆனால் ஜீவா நடிக்கும் இந்த படத்தில் மட்டும் மொத்தம் பத்து லிப் லாக் காட்சிகள் இடம்பெறுகிறதாம். அந்த வகையில் லிப் லாக்கில் கமலின் சாதனையை ஒரே படத்தில் ஜீவா முறியடித்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

Related Posts