கமலின் அடுத்த படம் பஞ்சதந்திரம் பார்ட் 2?

கடந்த வாரம் செவாலியே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கம்ல்ஹாசன் கால் ஆபரேஷனில் இருந்து இப்போதுதான் தேறி வருகிறார்.

panjathantheram

சபாஷ் நாயுடு படத்தின் வெளிநாட்டு போர்ஷன் மட்டும்தான் படமாக்கப்பட்டுள்ளது. இங்கே எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் பெண்டிங்கில் உள்ளன. கமல் பழையபடி படப்பிடிப்பில் கலந்துகொள்ள இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்கிறார்கள். எனவே இந்த ஆண்டு சபாஷ் நாயுடு ரிலீஸ் ஆவது

சந்தேகம்தான். அநேகமாக பொங்கலுக்கு வெளியாகலாம்.

கமல் அடுத்து பண்ணுவதற்காக திட்டமிட்ட படம் விமான கடத்தைலை மையமாக வைத்தது. கமலின் இணை இயக்குநரும் தூங்காவனம் இயக்குநருமான ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்தில் நடிப்பதாக இருந்த்து.

ஆனால் கால் ஆபரேஷன் முடிந்து ஓய்வில் இருந்தபோது கமல் மனதில் இன்னொரு ஐடியா உருவாகி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குமுன் தன் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான பஞ்சதந்திரம் பார்ட் 2 எடுக்கலாம் என்பதுதான் அந்த ஐடியா. யோசனை தோன்றிய உடனேயே கிரேசி மோகனையும், கே.எஸ்.ரவிகுமாரையும் வரவழைத்து பேசிவிட்டாராம். அதற்கான திரைக்கதை

எழுதும் பணி சென்றுகொண்டிருக்கிறது.

கமலின் அடுத்த படம் பஞ்சதந்திரமா இல்லை விமான கடத்தல் தொடர்பான படமா என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. கமல் எடுக்கும் முடிவே இறுதியானது.

Related Posts