கபாலி ரிலீஸ் திகதி இதோ

ரசிகர்களால் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் திகதி வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

kabali-re

முன்னதாக, இன்று இப்படத்தை சென்சார் போர்டு அதிகாரிகள் பார்த்து, படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஜுலை 22-ந் திகதியே ‘கபாலி’ படம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மற்றும் மலாய் மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், நாசர், கலையரசன், ரித்விகா, தினேஷ், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜுலை 22-ந் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் இப்போதே உற்சாகமடைந்துள்ளனர். ‘கபாலி’ படத்தை வரவேற்க இப்போதே தயாராகிவிட்டனர். எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் புரோமோஷன்கள் எல்லாம் பிரம்மாண்டமாய் செய்யப்பட்டுள்ளன. இப்படம் கண்டிப்பாக ரஜினியின் திரை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் சினிமா வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் இதுவரை எந்த திரைப்படங்களுக்கும் இல்லாத அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் ‘கபாலி’ படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts