ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்க இருப்பதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் ஒரு நிழல் உலக தாதா என இதுவரை நம்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் புகைப்படம் ஒன்றில் ரஜினி மலேசிய போலீஸ் அதிகாரி தோற்றத்தில் உள்ளார். இதனால், ரஜினியின் கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும்? என்கிற குழப்பம் நீடிக்கிறது. அது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்துக்கான பிரம்மாண்ட செட்கள் சென்னை ஈ.சி.ஆர்.-ல் உள்ள பனையூரின் ‘ஆதித்யாராம் ஸ்டுடியோவில்’ அமைக்கப்பட உள்ளது.
இங்கே, சென்னையில் நடக்கும் காட்சிகளும், மலேசியாவின் பகுதியில் உள்ள உட்புற காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன. ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, நாசர், ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன், ஜான் விஜய் உள்பட பலர் நடிக்கும் இந்த படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.