கபாலி திரைப்படம் பார்வையிட விடுமுறை அறிவிப்பு

சுப்பர் ஸ்டார் ரஜின் காந்தின் புதிய திரைப்படமான காபலி திரைப்படத்தை பார்வையிடுவதற்கு இந்தியாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

rajini

தென் இந்தியாவில் பல நிறுவனங்களில் இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் சுகயீன விடுமுறை எடுத்தல், தொலைபேசிகளை நிறுத்தி வைத்தல், பணிக்கு வராமல் இருத்தல் ஆகியனவற்றை தடுக்க இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கபாலி திரைப்படம் இந்தியாவில் 12000 திரையறங்குகளில் திரையிடப்பட உள்ளது.

கபாலி திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே விநியோக உரிமையின் ஊடாக சுமார் 30 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.

சென்னை மற்றம் பங்களுரு அகிய தென்னிந்திய பகுதிகளில் பல நிறுவனங்கள் நாளை மூடப்பட உள்ளன.

சில நிறுவனங்கள் கபாலி திரைப்படத்தை பார்வையிடுவதற்கு இலவச டிக்கட்டுகளையும் வழங்கியுள்ளன.

எயார் ஏசிய என்ற விமான நிறுவனம் கபாலி திரைப்படத்திற்காகவே விசேட விமான போக்குவரத்துச் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

Related Posts