கபாலி டீசர் சாதனை! (வீடியோ)

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கபாலி’. ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் 11 மணியளவில் வெளியானது. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், லைக்குகளும் அதிகரித்துக் கொண்டே சென்றது. யூடியூப்பில் இந்த எண்ணிக்கையை காட்ட முடியாதளவிற்கு ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர்.

kabali

இதற்காக யூடியூப் நிறுவனம், தயாரிப்பாளர் தாணுவிடம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்ததால், பார்வையாளர் எண்ணிக்கையை சரிவர கணக்கெடுக்க முடியவில்லை, விரைவில் இதுகுறித்து அப்டேட் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

பின்னர் ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பேர் பார்வையிட்டதாக கலைப்புலி தாணு அறிவித்திருக்கிறார். ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பேர் ஒரு படத்தின் டீசரைப் பார்த்தது இணையத்தளத்தில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதுவரை இந்தியாவில் எந்தப் படத்தின் டீசரையும் இவ்வளவு வேகமாக பத்து லட்சம் பேர் பார்த்ததில்லை. அதேபோல டீசர் வெளியான இரண்டு மணி நேரத்தில் 1.20 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. இதுவும் புதிய சாதனை என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

இது ஒருபக்கம் இருக்க, ‘கபாலி’ டீசரை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர். ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டர் தளத்தில், “அந்த கண்கள்.. அந்த சிரிப்பு.. அந்த வாய்ஸ் மற்றும் அந்த நடை… அய்யோ தலைவா..!!நன்றி பீம்ஜி (ரஞ்சித்) மற்றும் டீம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், “தலைவர் வெறித்தனம்… ரஞ்சித் பிரதர் மகிழ்ச்சியின் உச்சம்” என்று கூறியுள்ளார். பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, “இதான் ஸ்டைல் இதான் ரஜினி இதான் தலைவா….” என்று தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ், “நெருப்புடா.. நெருங்குடா… தலைவா… நன்றி ரஞ்சித் அன்ட் டீம்” என்று கூறியுள்ளார்.

Related Posts