கபாலியை வாங்கிய அருண்பாண்டியன்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் ஒருவழியாக ஜுலை 22-ந் தேதி வெளியாகப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, படத்துக்கான புரோமோஷன்கள் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

Arunpandiyan

இந்நிலையில், ‘கபாலி’ படத்தின் சிங்கப்பூர் வெளியீட்டு உரிமையை நடிகர் அருண்பாண்டியன் வாங்கியுள்ளார். அவர் தனது ஏபிஐ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வாங்கி இதை சிங்கப்பூரில் வெளியிடுகிறார். இதுவரை எந்த தமிழ் படங்களும் இல்லாத அளவுக்கு ‘கபாலி’ படம் வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது. இது படக்குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் ‘கபாலி’ படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ‘கபாலி’ படத்தை வரவேற்க ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts