உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.
இன்றுமுதல் வெளிநாடுகளில் இப்படத்தின் பிரிமீயர் ஷோ திரையிடப்படுகிறது.
கபாலி படத்திற்கு திருட்டு விசிடி வெளிவந்துவிடக்கூடாது, மேலும், இணையதளங்களிலும் படத்தை யாரும் வெளியிட்டு விடக்கூடாது என்பதில் படக்குழுவினர் முழு தீவிரமாக உள்ளனர்.
இந்நிலையில், ‘கபாலி’ படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சி தற்போது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.
அந்த காட்சியில், மலேசியா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரஜினியை பொலிஸ் அதிகாரி வெளியே அழைக்கிறார்.
சிறைக்குள் இருந்து வெளியே வரும்போதே தன்னை அடைத்திருந்து அறையின் வாசலில் தண்டால் எடுத்துவிட்டு வெளியே வருகிறார் ரஜினி.
வெளியே வந்ததும் ஒருவர் ரஜினியின் கையை பிடித்துக்கொண்டு அண்ணே, இன்னும் ரெண்டே மாசம்தான் வெளியேவந்து உங்களுக்கு பின்னுக்கு வந்து நிற்பேன். கண்டிப்பா பின்னுக்கு வந்து நிற்பேன் என்று ரஜினியிடம் வசனம் பேசுகிறார்.
பின்னர், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அனைவரின் கைதட்டலுடன் சிறை வார்டன் அறைக்கு வந்து நோட்டில் கைநாட்டு வைக்கிறார். அதன்பின்னர், அவருக்கான உடை கொடுக்கப்பட்டதும், அதை அணிந்துகொள்கிறார்.
இந்த காட்சிகள் எல்லாம் வரும்போது ரஜினியின் முகம் காட்டப்பட்டவில்லை. அந்த கோட் சூட்டை அணிந்து சிறையின் பிரம்மாண்ட வாசல் அருகே ரஜினி நிற்கும்போது, அந்த வாசல் திறக்கிறது. அப்படியே, ரஜினியின் முகம் காட்டப்படுகிறது.
தனது பேண்ட் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் நுழைத்தவாறு தனக்கே உரித்தான ஸ்டைலில் கேட்டின் முன் நிற்கிறார் ரஜினி. இந்த காட்சியை பின்னணி இசையோடு சேர்த்து பார்க்கும்போது அப்படியே பரவசத்தில் தள்ளுகிறது.
இதுவரையிலான காட்சிதான் தற்போது சமூக இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த காட்சியை பார்க்கும்போது, அந்த காட்சியை தியேட்டரில் சென்றுதான் பார்க்கவேண்டும் என்ற ஆவல்தான் ஏற்படுகிறதே தவிர, இதுபோதும் என்று திருப்தியடைய முடியவில்லை.