‘கபாலி’யில் ரஜினியை வேறுவிதமாகப் பார்த்ததில் மகிழ்ச்சி : சோ ராமசாமி

ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கபாலி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. எனினும் வசூலில் இப்படம் குறை வைக்கவில்லை. இதனால் மகிழ்ந்து போன ரஜினி இப்படத்தின் வெற்றி குறித்த தனது மகிழ்ச்சியை கடிதமாக எழுதி வெளிப்படுத்தியிருந்தார்.

so-Cho-Ramasamy

‘கபாலி’ படத்தின் சிறப்பு காட்சியை அமெரிக்காவில் கண்டு ரசித்த ரஜினி, தற்போது சென்னை திரும்பியுவுடன் தனது நண்பரான சோவுக்கு இப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தார். அப்போது, ரஜினியும் கலந்துகொண்டு மீண்டும் ஒருமுறை ‘கபாலி’ படத்தை பார்த்தார்.

படம் முடிந்தவுடன் ‘கபாலி’ குறித்து சோ ராமசாமி, “கபாலி நன்றாக உள்ளது. ரஜினியை இப்படத்தில் வேறு கோணத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி” என்று ரஜினி மற்றும் படக்குழுவினரை பாராட்டினார். இந்த சிறப்பு காட்சியின்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் உடனிருந்தார்.

Related Posts