கன்னட படம் பார்த்த ரஜினிகாந்த்!

ரஜினி நடித்த பணக்காரன், மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களை இயக்கியவர் பி.வாசு. இதில் குசேலன் மட்டும் தோல்வியாக அமைந்தது.

அதன்பிறகு தமிழில் புலிவேஷம் படத்தை மட்டுமே இயக்கிய அவர், கன்னடத்தில் படங்கள் இயக்கி வருகிறார். திரிஷ்யம் மலையாள படத்தை கன்னடத்தில் ரவிச்சந்திரன்-நவ்யா நாயரை வைத்து ரீமேக் செய்தவர், தற்போது சிவராஜ்குமாரை வைத்து சிவலிங்கா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான அப்படம் கர்நாடகாவில் சூப்பர் ஹிட்டாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

அதோடு சிவலிங்கா படத்தை தமிழிலும் வெளியிட்டுள்ளனர். சென்னையிலுள்ள சில தியேட்டர்களில் படம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் உற்சாகமடைந்த பி.வாசு, தனது திரையுலக நட்பு வட்டாரங்களுக்கும் அந்த படத்தை திரையிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபகாலமாக மற்ற நடிகர்கள் நடித்த படங்களை பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கி வரும் ரஜினியும் நேற்றைய தினம் சிவலிங்கா படத்தை பார்த்து ரசித்தாராம்.

Related Posts