யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தியும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் கனேடிய தூதரகத்தின் ஐ.நாவிற்கான அதிகாரிகள் யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் கலந்துரையாடியுள்ளனர்.
கனேடிய தூதரகத்தின் ஐ.நாவிற்கான அதிகாரிகளான ஆலோசகர் மேர்கன் போஸ்டர், முதன்மைச் செயலாளர் ஈஸ்தர் வான்நெஸ் ஆகியோர் இன்று பிற்பகல் 2.30 மணியலவில் யாழ். மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
.
இக்கலந்துரையாடலின் போது யாழ் மாவட்டத்தில் தற்போது நடைபெறும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாகவும் தற்போதய மக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அரச அதிபர் தெரிவித்தார்.
- Sunday
- January 12th, 2025