கனவுகள் வளர்த்திடுவோமே பாடலுடன் Dr.A.P.J. Abdul kalam இன் யாழ் இந்துக் கல்லூரிக்கான விஜயம் பற்றிய ஒளித் தொகுப்பு

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களால் அண்மையில் வெளியிடப்பட்ட சங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள பாடல் ”கனவுகள் வளர்த்திடுவோமே..புதிய கலைகள் வளர்த்திடுவோமே..இந்துவின் மைந்தராய் இமையத்தை வென்றிடவேண்டும்.”எனும் பாடல். இப்பாடலில் Dr.A.P.J. Abdul kalam ,இன் “இளைஞர்களே கனவு காணுங்கள்” என்ற வார்த்தைக்கு அமைய அவருடைய அனுபவங்கள், தத்துவங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு பாடப்பட்டது இப்பாடல். அந்த வகையில் இப்பாடல் வெளியாகிய குறுகிய காலத்திலேயே Dr.A.P.J. Abdul kalam அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வருகை தந்தமை எமது கல்லூரி வரலாற்றிலேயே ஒரு முக்கியமான விடயமாக கருதப்படுவதுடன் எமது கல்லூரிக்கும் பெருமை சேர்க்கின்ற விடயமாக அமைந்துள்ளது. இந்தப் பாடலுடன் Dr.A.P.J. Abdul kalam இன் யாழ் இந்துக் கல்லூரிக்கான விஜயம் பற்றிய ஒளித் தொகுப்பும் அடங்கியிருக்கின்றது.

Related Posts