வடமாகாண சபையும் கனடாவின் மார்க்கம் நகர சபையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளன.
இவ் ஒப்பந்தமானது எதிர்வரும் 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று கைச்சாத்திடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கனடா விஜயம் செய்துள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்த வட மாகாண முதலமைச்சரை, பிரதமர், மார்க்கம் நகரசபை கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் லண்டன் கிங்ஸ்ரன் நகர சபையுடன், வடமாகாண சபை இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது. அதன்படி வடமாகாண சபை கைச்சாத்திடும் இரண்டாவது இரட்டை நகர் உடன்படி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.