கனடா மசூதியில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி!

கனடாவின் கியூபெக் நகரத்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

கனடாவின் கியூபெக் நகரத்தில் இஸ்லாமிய கலாச்சார மையம் ஒன்று அமைந்துள்ளது. அதன் வளாகத்தில் வழிபாடு மசூதியொன்றும் அமைந்துள்ளது.அங்கெ உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. அப்பொழுது அங்கே கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் . மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் இந்த செயலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், மேலும் ஒருவனை போலீசார் தேடி வருவதாகவும், கனடாவின் சி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த துயர சம்பவத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு வருத்தம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதே பள்ளிவாசலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெட்டப்பட்ட பன்றியின் தலை ஒன்று வீசப்பட்டது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts