கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, சிலர் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர். இவ்விடயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.
“இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில், வேலைவாய்ப்புத் தொடர்பில் எந்தவொரு ஒப்பந்தங்களும் இல்லை.
“அண்மையில் கனடாவில் வேலைப் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவரை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தச் சந்தேகநபர், தலா 4 இலட்சம் ரூபாயை வீதம் பெற்றுள்ளார். ஆதலால், மக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.