கனடாவில் யாழைச் சேர்ந்த பெண் வாகனத்துடன் எரித்துக் கொலை

கனடா மொன்றியலில் யாழ். அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய யாழ். அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்பவர் வாகனத்துடன் சேர்த்து எரிக்கபட்டுள்ளதாக மொன்றியல் போலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ தினம் காலை 9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்தை பல 911அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் எரிந்த வாகனத்துகுள் இருந்து இரண்டு உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடர்ந்தனர்.

எரியூட்டப்பட்ட 2 உடல்களில் ஒன்று ஆண் மற்றையது பெண்ணினுடையதும் என்பதும், இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என்பதும் ஆனால் முன் விரோதமே கொலைக்கு காரணம் என்றும் நம்பப்படுகிறது.

Related Posts